புலிகள் குறித்து உத்தரவாரதம் அளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அமுல்படுத்தத் தயார்: அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அறிவிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சை ஆதராம் காட்டி சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள் என உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என தூதுவராலயங்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேற குறைந்தபட்சம் ஒரு வார கால போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு மேற்குலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment