பிரபா இப்போது பதுங்கு குழிக்குள் அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்! அமெரிக்கத் தூதுவருக்கு இராணுவத் தளபதி தகவல்
புதுக்குடியிருப்பு சண்டைகளில் தனது முக்கிய தளபதிகளை இழந்த போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவிலேயே ஒளிந்திருக்கலாம்.
அனேகமாகப் பாதுகாப்பு வலயப் பகுதியில் அல்லது பதுங்கு குழிக்குள் (பங்கருக் குள்) ஒளித்திருக்கலாம்.
இவ்வாறு கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் றொபேட் ஓ.பிளேக் நேற்றுத் தம்மைச் சந்தித்த போது இதனை அவரிடம் பொன் சேகா தெரிவித்தார் என படைத்தரப்பின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராணுவத் தலை மையகத்துக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற அமெரிக்கத் தூதுவர், இரா ணுவத் தளபதியுடன் வன்னிப் போர் நிலை மைகள் தொடர்பாக விரிவான முறையில் பேச்சுக்களை நடத்தினார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதி இராணுவத்தின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவத் தளபதி விரிவாக விளக்கினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைவிட பாதுகாப்பு வலயமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுடைய நிலை தொடர்பாகவும் விளக்கிய அவர், அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக படையினர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடரும் இந்த போரில் விடுதலைப் புலிகளின் இடைநிலை மட்டத்தில் உள்ள தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்த சரத் பொன்சேகா, படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதுவருடன், அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புத்துறை ஆலோசகரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment