எனது கணவர் கொல்லப்பட்டு ஒரு வருடத்திற்குள் கொலையாளிகளுக்கு இறுதிக்காலம்

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பர்ணாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டு ஒரு வருட பூர்த்தி குறித்து நாட்டின் பல பகுதிகளில், அவரை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான நிகழ்வுகள் குறிப்பாக கட்டான தேர்தல் தொகுதியில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டான தொகுதி அமைப்பாளரும் அமரர் ஜெயராஜ் பர்ணாண்டோ புள்ளேயின் பாரியாருமான சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே உரையாற்றினார். தனது கணவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த தினத்தில் இலங்கை இராணுவம், புலிகளிடமிருந்த பிரதேசத்தை முற்றாக கைப்பற்றி அவர்களுக்கு முடிவுகட்டும் நிகழ்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சம் என இதன் போது அவர் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment