மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இருதரப்பும் முன் வரவேண்டும் -புளொட் சித்தார்த்தன்
புதுக்குடியிருப்புப் பிரதேசம் பாதுகாப்புப் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தற்போது புலிகளின் பிடியிலுள்ள பகுதியில் (பாதுகாப்பு வலயம்) வாழும் மக்களை அரசாங்கம் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென புளொட் இயக்கத்தின் தலைவர் ரீ. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களுக்காகவே ஆயுதம் தாங்கி மக்கள் உரிமைகளுக்காகவே போராடி வருவதாகத் தெரிவித்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களைச் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென்வும் அவர் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பை இராணுவம் கைப்பற்றியது தொடர்பில் ஊடகம் ஒன்று சித்தார்த்தனிடம் கருத்துக் கேட்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களுடன் மக்களாகவே எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளும் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பைக் கருதி அரசாங்கம் ஒருபோதும் தாக்குதல்களை நடத்தப் போவதில்லையென்றே நம்ப வேண்டும்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களைச் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்காவிடில் அந்த அப்பாவி மக்கள் வேறு அவலங்களுக்கு முகங்கொள்ள நேரிடும். இவ்வாறானதொரு நிலையில் புலிகள் அரசின் மீது மேலும் குற்றஞ்சாட்டுவார்களானால் அது ஒரு வேடிக்கையாகவே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment