இலங்கைப் பிரச்சினை முற்றியதற்கு காங்கிரஸும் கருணாநிதியுமே காரணம்
இலங்கைப் பிரச்சினை முற்றியதற்கு வட இந்தியர்கள் காரணம் இல்லை. காங்கிரஸ் கட்சியும் முதல்வர் கருணாநிதியும் தான் இதற்குக் காரணம். இவர்களில் கருணாநிதிதான் முதலாவது துரோகி என்று ம.தி.மு.க. செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். டெஹல்கா இதழுக்கு வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
டெஹல்கா: பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இன்னும் அந்தக் கருத்தில் நிலையாக இருக்கிறீர்களா..?
வைகோ எப்போதுமே நான் சொன்னதிலிருந்து பின் வாங்கியதில்லை. முழுமையாக உணர்ந்த பிறகே நான் எதையும் பேசுவேன். இலங்கைத் தமிழருக்காக தங்களது உயிரையும் மாய்த்துக்கொள்ள பலர் தயாராக இருக்கிறார்கள். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஈழப்பிரச்சினைக்காக 12 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான், பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்றேன். எனது வார்த்தைகள் ஒரு பேச்சின் வெளிப்பாடுதான். அதற்கு மேல் எதுவும் இல்லை. கருணாநிதி இதே போல நிறைய முறை பேசியுள்ளார். எரிமலையாக வெடித்துச் சிதறுவோம் என்று கூறியுள்ளார். ஒரு எரிமலை வெடித்தால் உயிரிழப்பு ஏற்படாதா? தனது 15 ஆண்டுகால வரலாற்றில் ம.தி.மு.க. ஒருபோதும் வன்முறையில் இறங்கியதில்லை. எனது தொண்டர்கள் மிக மிக ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடானவர்கள்.
டெஹல்காஈழப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?
வைகோ எங்களது கனவிலும் கூட யாருக்கும் தீங்கிழைக்க நாங்கள் நினைத்ததில்லை. வட இந்தியர்களை எங்களது சகோதரர்களா,சகோதரிகளாகத்தான் நாங்கள் நினைக்கின்றோம். காங்கிரஸ் கட்சிதான் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. வட இந்தியர்கள் இதற்குக் காரணமல்ல. கருணாநிதிதான் முக்கிய குற்றவாளி. அவர்தான் முதல் துரோகி. மக்களின் கோபமெல்லாம் இதுபோன்ற துரோகிகள் மீதுதான். வட இந்திய மக்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள்.
டெஹல்கா முதல்வர் கருணாநிதி உங்களது குருவாக இருந்தவர். இப்போது துரோகி என்கிறீர்கள். இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
வைகோ விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதால், விடுதலைப்புலிகளிடமிருந்து நாங்கள் பணம் பெறுகிறோம் என்று கூறி எங்களை களங்கப்படுத்த முயற்சித்தவர் கருணாநிதி.
டெஹல்காஎந்த அடிப்படையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?
வைகோ ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் தலைவர் சோனியா காந்திதான். கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை அளித்துக்கொண்டிருக்கிறது. அவருடைய மேற்பார்வையில்தான் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் பட்டுவரும் இன்னல் குறித்து சோனி யா காந்தி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆயிரக்கணக்கில் உயிரிழந்த பிறகும் கூட அவர் எதுவுமே பேசவில்லை.
அமெரிக்கா இங்கிலாந்து ஏன் ஐ.நா.வே கூட இலங்கையில் போர்நிறுத்ததம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறபோது ஏன் இந்தியா அப்படி ஒரு கோரிக்கையை வைக்காமல் உள்ளது.
டெஹல்கா ஈழப்பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டால் சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறுண்டு போகும் என சமீபத்தில் கூறினீர்களே.
வைகோ இந்திய அரசை எச்சரிக்கும் வகையில்தான் நான் அப்படி சொன்னேன். சோவியத் யூனியன் ஒரே நாடாக இருந்தது. ஆனால், ரஷ்யாவின் ஆதிக்கம் காரணமாகவே அது சிதறிப்போனது.இங்கிலாந்துக்காரர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இந்தியா என்ற நாடாக நமது நாடு இல்லை.
இந்தியாவின் ஒற்றுமையிலும் ஒருமைப்பாட்டிலும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.அது தொடர வேண்டும் என்று விரும்புகின்றேன்.
ஆனால், காங்கிரஸ் அரசு தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் இனவாத இலங்கை அரசுக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளை அளித்துக் கொண்டிருந்தால் இந்தியாவில் உள்ள தமிழர்களின் மனங்களில் பிரிவினைவாத விதைகள் தூவப்பட ஏதுவாகி விடும்.
அதன் பின்னர் இந்தியாவின் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் கேள்விக்குறியாகி விடும் என்றார் வைகோ.
0 விமர்சனங்கள்:
Post a Comment