இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் சம்பவத்திற்கு நோர்வே மன்னிப்புக் கோரியது (தாக்குதல் வீடியோ இணைப்பு)
நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் மீத நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நோர்வே அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பை நோர்வே அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். நோர்வேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியொன்றின் போது இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்பட்டதாகவும், தூதரகம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குலுடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நோர்வே அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த சம்பவம் வருந்தத்தக்க ஓர் சம்பவமாகும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் தெரிவித்துள்ளார்.
Sri Lankan embassy in Oslo attacked by LTTE supporters
0 விமர்சனங்கள்:
Post a Comment