இலங்கை விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டன் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினை குறித்து நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோருடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருவரும் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். இதன்போது ஹிலாரி கிளிண்டன் கூறுகையில்,
"எங்களது பேச்சின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இலங்கை பிரச்சினை குறித்தும் விவாதித்தோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு எட்ட, நோர்வே எடுத்து வரும் அயராத முயற்சிகள் குறித்து கலந்துரையாடினோம். இதுதவிர ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, புவி தட்பவெப்ப மாற்றம் குறித்தும் விவாதித்தோம்" என தெரிவித்தார். 2002ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட நோர்வே அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment