அனுசரணையாளர்கள் என்ற நிலை ஏற்கனவே நீங்கிவிட்டது: நோர்வே
இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்கள் என்ற நிலை ஏற்கனவே நீங்கிவிட்டதாக இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பவர் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து அனுசரணையாளர்களாகத் தம்மால் பணியாற்ற முடியவில்லையென அவர் கூறியுள்ளார்.
“சமாதான முயற்சிகள் 2006ஆம் ஆண்டு முறிவடைந்த பின்னர் எம்மால் அனுசரணையாளர்களாகப் பணியாற்ற முடியாது” என பவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்கள் என்ற நிலையிலிருந்து நோர்வேயை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்தே ஜோன் ஹன்சன் பவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தமிழ் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சமாதான அனுசரணையாளர்கள் நிலையிலிருந்து நோர்வேயை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment