பாதுகாப்பு வலயப்பகுதி மக்கள் பற்றிய அரசின் குழப்பமான புள்ளி விபரங்கள்
வரலாறு காணாத மனிதப் பேரழிவையும் அவலத்தையும் வன்னியில் தமிழினம் சந்தித் துக் கொண்டிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் வசித்து வந்த ஒரு இலட்சத் துக்கும் மேற்பட்ட மக்களை கடந்த சில நாட் களில் பாதுகாப்பாக வெளியேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு வலயத்துக்குள் மிகப் பெரி யளவில் பொதுமக்களுக்கு அழிவுகள் ஏற்பட் டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. (கடந்த மூன்று மாதங்களில் வன்னியில் 6500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14,000 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா.வின் அறிக்கை ஒன்றும் வெளியாகியிருக்கிறது.) அரசாங்கம் இதை உலகின் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த நட வடிக்கையின் போது முதல் நான்கு நாட்களி லும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 2000 ஐத் தாண்டி விட்டதாகவும் 4000 க்கும் அதிக மானோர் காயமுற்றதாகவும் வன்னித் தகவல் கள் தெரிவித்துள்ளன.
வன்னிப் பகுதி மோதல்கள் தொடர்பாகவும் அங்கு வாழும் மக்கள் தொடர்பாகவும் மோதல்களில் கொல்லப்படும், காயமடையும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் எப்போ தும் குழப்பம் நிறைந்தவையாகவே இருந்து வந்துள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாது காப்பு வலயத்துக்குள் வாழ்ந்த மக்கள் எத்தனை பேர் என்பதில் தொடங்கி இப்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் தொகை வரைக்கும் நிறையவே முரண்பாடு கள் காணப்படுகின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரம், பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி யில் இலட்சக்கணக் கான மக்கள் வாழ் கிறார்கள் என்பதெல் லாம் முழுப்பொய். அங்கு 89,000 பேர் மட்டுமே இருக்கிறார் கள்' என்று கூறியிருந் தார். அதேவேளை பெப் ரவரி 11ஆம் திகதி ஊடகத்துறை அமைச் சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தகவல் வெளியிட்ட போது "முல்லைத்தீவில் இருந்த 113,832 மக்களில் 31,500 பேர் அங்கிருந்து வெளியேறி விட்ட தாகக் கூறியிருந்தார்.
பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் படை நடவடிக்கை ஆரம்பிக் கப்பட்ட கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குச் சென்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 72,571 என்கிறது அரசாங்க அறிக்கை. இதன்படி பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷவின் கருத்து மற்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் அறிக்கை ஆகியன வெளியானதற்குப் பின் னர் கடந்த 20ஆம் திகதி வரைக்கும் அரச கட் டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களின் அண் ணளவான தொகை 40,000 ஆகும். இந்தநிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறிய 89,000 பேரில் இருந்து 40,000 பேரைக் கழித்தால் பாதுகாப்பு வலயத்துக்குள் 50,000 பேர் தான் மிஞ்சியிருந் திருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிக மான மக்களை வெளி யேற்றியிருப்பதாக அர சாங்கம் இப் போது கூறு கிறது. புலிகள் பொய் சொல் கிறார்கள். அரச அதி காரி களை மிரட்டித் தயாரித்த தவறான புள்ளி விவரங்க ளைக் காட்டி உலகத்தை ஏமாற்றுகி றார்கள் என்று கூறிய அரசாங்கம் இப் போது எதைச் செய்திருக் கிறது? பாதுகாப்பு வலயத்துக்குள் 70,000 பேருக்கு மேல் இல்லை என்று கூறி அரசாங்கம் அவ்வப் போது குறைந்தளவு உண வுப்பொருட்க ளையே கொண்டு செல்ல அனு மதித்து வந்தது.
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் மிகப் பெரிய அவலங்களைச் சந்திக்க நேரிட்டது. தமது வசதிக்காக குறைந்தளவு மக்களே அங் கிருப்பதாக கூறி, மறைமுகமான பொருளாதார உணவுத் தடைகளைப் போட்ட அரசாங்கம், இப்போது உண்மையைச் சொல்ல வருவ தேன்? உலகின் மிகப்பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையைத் தாம் மேற்கொண்ட தாக வரலாற்றில் பதிவு செய்துகொள்வதற்கா கவே அரசாங்கம் இந்த உண்மையைச் சொல்ல வருகிறது.ஆனால் அதில் கூட உண்மை இருக்கிறதா என்றால் அங்கேயும் குழப்பங்கள் தான் அதிகமாக உள்ளன. பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற் றப்பட்ட மக்களின் தொகை பற்றிய குழப்ப மான அறிக்கைகள் பல வெளியாகியிருக்கின் றன.நாளாந்த வாரியாக வெளியேற்றப்பட்ட மக் களின் தொகை பற்றி அரசாங்கத் தரப்பில் இருந்தே மூன்று வித்தியாசமான புள்ளிவிவ ரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 20ஆம் திகதி வெளியேற்றப்பட்ட மக்களின் தொகை 42,316 என்கிறது பாது காப்பு ஊடகத் தகவல் நிலையத்தின் அறிக்கை. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அந்தத் தொகை 41,075 என்று கடந்த 22 ஆம் திகதி நடந்த செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார். அதேவேளை பாதுகாப்பு அமைச்சோ 39,845 பேர் வெளியேற்றப்பட்டதாக அறிக் கையிட்டிருக்கிறது. 21ஆம் திகதி வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் மிகப் பெரியது.
ஊடக மத்திய நிலையம் 40,704 பேர் என்று கூறியிருக்கும் நிலையில், பிரிகேடியர் உதய நாணயக்கார 36,718 பேர் என்று கூறியி ருந்தார். ஆனால் பாதுகாப்பு அமைச்சோ 26,580 பேர் வெளியேற் றப்பட்டனர் என் கிறது. 22ஆம் திகதி 20,123 பேர் வெளியேற்றப் பட்டதாக ஊடக மத்திய நிலையம் கூறியிருக் கின்ற நிலையில், பாதுகாப்பு அமைச்சு 36,106 பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியிருந்தது.
பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தினது தகவல் படி முதல் மூன்று நாட்களிலும் வெளி யேற்றப்பட்ட மக்களின் தொகை 103,143 ஆகும். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் தக வல் படி இந்தக் காலத்தில் வெளியேற்றப்பட் டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,531 பேர் தான். 612 பேரின் கணக்கு இதில் வித்தியாசப்பட் டது. அதேவேளை பாதுகாப்பு அமைச்சு 23ஆம் திகதி மேலும் 3499பேர் வெளியேற் றப்பட்டதாகக் கூறி மொத்தம் நான்கு நாட்களி லும் வெளியேற்றப்பட்ட மக்களின் தொகை 106,030 பேர் என்று கூறியுள்ளது. ஆனால் ஊடக மத்திய நிலையமோ 2934பேர் தான் 23ஆம் திகதி வெளியேற்றப் பட்டதாகக் கூறியுள்ளதுடன், நான்கு நாட்களி லும் 106,077 பேர் வெளியேற்றப்பட்டிருப்ப தாக கூறியுள்ளது.
ஒரே அரசாங்கத்தின் ஒரே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கின்ற தரப்புகளின் அறிக்கைகளில் காணப்படும் குழப்பமான இந்த புள்ளிவிவரங்கள் முக்கியமாகக் கவனத் தில் எடுக்கப்பட வேண்டியவை. ஆனால் இது பற்றி எவருமே கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னமும் வாழும் மக்களின் தொகை எவ்வ ளவு என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. பாதுகாப்புத் தரப்போடு தொடர்புடைய சில வட்டாரங்கள் 50,000 பேர் இன்னமும் அப் பகுதியில் வசிப்பதாகக் கூறியிருப்பினும், இரா ணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சேகா 15,000பேர் தான் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த மாதம் அரசாங்கம் 70,000 பேர் தான் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதாகக் கூறியது அரசாங்கம். ஆனால் கடந்த பெப்ர வரி மாதத்துக்குப் பின்னர் வெளியேற்றப்பட்ட மக்களின் தொகையே 145,000 பேருக்கு மேல் என்பதை அரசாங்கம் இப்போது உறுதி செய்தி ருக்கிறது. இதைவிட குறைந்தது 15,000 பேர் பாது காப்பு வலயத்துக்குள் இன்னமும் இருப்பதாக வும் கூறுகிறது.இந்தத் தகவல்களின்படி, குறைந்தது ஒன்றரை இலட்சம் மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்திருப்பதை அரசாங்கமே உறுதி செய்கிறது. ஆனால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட உணவும், மருந்தும் பாதியளவானோருக்கே அனுப்பப்பட்டன. இந்த நிலையில் பாதுகாப்பு வலயத்துக்குள் உணவுத் தட்டுப்பாடே இல்லை என்றும் அதெல்லாம் வெறும் பிரசாரம் என்றும் அமைச்சர்கள் கூறியிருந்தனர். அரசாங்கம் பாதுகாப்பு வலயத்துக்குள் வாழ்ந்த , வாழும் மக்கள் பற்றிய பல உண்மைகளை மறைத்து வந்தது இப்போது அதன் வாயாலேயே அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
போருக்குள் வாழும் மக்களின் அவலங்களையும் அவர்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்புகளையும் மறைத்து மனிதாபிமான நடவடிக்கையில் வெற்றி பெற்றதாக அரசாங்கம் காட்டிக் கொண்டது. ஆனால் இன்று அரசாங்கம் தனது முன்னைய அறிக்கைகளையே நிராகரிக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment