"இலங்கை தொடர்பாக முழு உலகுமே ஏமாற்றம்'
இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக அமெரிக்கா கடும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
25 வருடகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் இலங்கையின் முயற்சிகள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதையிட்டு முழு உலகமுமே ஏமாற்றம் அடைந்திருக்கிறது என்பதை இலங்கை அரசு அறியும் என்று நான் நினைக்கிறேன் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் குழுக்கூட்டத்திலேயே ஹிலாரி இதனை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை "பயங்கரமான மனிதாபிமான துன்பியல்' என்று குறிப்பிட்டிருக்கும் திருமதி கிளின்டன் சண்டையை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மோதலை நிறுத்துமாறு கேட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மோதலில் தளர்வை ஏற்படுத்தினாலோ அல்லது முடிவுக்குக் கொண்டுவந்தாலோ அதன்பின்னர் மனிதாபிமான உதவியை வழங்குவது மட்டுமன்றி அரசியல் தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றும் ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.
வருடங்களாக உள்கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களை ஒரு வழியில் அரசியல் நடவடிக்கைகளுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment