“எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்”: மேற்குலகிற்கு மகிந்த சாட்டையடி
ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்” என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
“உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும்.
எமது படையினர் தாய்மார்களையும், சிறுவர்களையும் எவ்வாறு மீட்டு வந்தார்கள் என்பதை புதுமாத்தளனில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களை படையினர் தூக்கி வந்தார்கள். இவை அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கூட அனைத்துலக சக்திகள் சில எம்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன.
ஈராக் எவ்வாறு குண்டுவீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்” என மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment