நான்கரை வயது சிறுவன் ஹரிகிஷன் அகில இலங்கை செஸ் போட்டிக்கு தெரிவு
இலங்கை செஸ் சம்மேளனம் மாகாண மட்டத்தில் நடத்திய செஸ் போட்டியில் கே.சி. ஹரிகிஷன் (வயது 4 1/2) மத்திய மாகாணத்தில் வெற்றிபெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாணத்திற்கான போட்டி கண்டி வித்தியார்த்த கல்லூரியில் மார்ச் 21,22,23 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் அகில இலங்கை போட்டி கொழும்பு ரோயல் கல்லூரியில் ஏப்ரல் 09.10.11.12 ஆம் திகதிகளில் நடைபெறும். மத்திய மாகாணத்தில் 8,9,10,13,15,18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கென ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 73 பேர் பங்குபற்றியதுடன் இதில் ஹரிகிஷன் எட்டு வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் வெற்றியீட்டி 12 ஆம் இடத்தை பெற்றே அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பேராதெனிய வீதியிலுள்ள Kiddies pep பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் இவர் கிருபாகர் காஞ்சனாதேவி (ஆசிரியர்கள்) ஆகியோரின் செல்வப்புதல்வனும் ஆசிரியை பிரியாங்கிக்கா ரணசிங்கவினால் பயிற்றப்பட்டவருமாவார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment