அமெரிக்கன் சந்தி படையினர் வசம்
முல்லைத்தீவில் ஏ-35 வீதியின் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் நேற்றைய தினம் அமெரிக்கன் சந்தி என்றழைக்கப்படும் பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 53வது படையணியினரே அப்பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளனர். புதுமாத்தளன் தெற்கிலிருந்;து வரும் வீதியும், முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வரும் வீதியும் ஒன்றிணையும் இடத்தையே புலிகள் அமெரிக்கன் சந்தி என அழைப்;பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதுக்குடியிருப்பின் கிழக்குப் பிரதேசத்திற்கான புலிகளின் விநியோக நடவடிக்கைகள் இச்சந்தியுடன் இணைந்ததாகவே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இப்பிரதேசத்தைத் தற்போது படையினர் கைப்பற்றியுள்ளதால் புலிகளின் மற்றுமொரு விநியோக மார்க்கம் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு புதுமாத்தளன் எல்லைப் பகுதியில் புலிகளிடமிருந்து தப்பி வந்த 1648 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்றுத் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்;சு அறிவித்;துள்ளது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகள் நடாத்திய எறிகணை மற்றும் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் துணிவுடன் தப்பி வந்துள்ளதாகவும் தப்பி வந்தவர்களில் 309 ஆண்களும் 630 பெண்களும் 357 சிறுவர்களும் 352 சிறுமிகளும் உள்ளடங்கியுள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுத் தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment