இரு மாணவிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் மனிதாபிமானம் காட்டுங்கள்..
இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் மனிதாபிமானம் காட்டுமாறு பிரிட்டிஷ் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியை ஒருவர் தனது இரு மாணவிகளுக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .
இலங்கைக்கு தாங்கள் பலவந்தமாக திருப்பி அனுப்பபட்டால் தாங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பீதியை பிரிட்டனிலுள்ள இலங்கையை சேர்ந்த ஜோசப் குடும்பம் தலைமை ஆசிரியையான ஜோ ஹக்ஸிடம் கூறியுள்ளார்.
ஜீவிதா, நீரஜா ஆகிய இருவரும் ஆங்கிலேய தியாகிகள் பாடசாலையில் 2008 அக்டோபர் 6ம்திகதி வகுப்பில் சேர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்விகற்று வருகின்றனர். அவர்கள் முன்மாதிரியான மாணவிகள் அசாதாரணமான முறையில் கடினமாக படிப்பார்கள் எப்போதும் சீரான உடையணிவார்கள் கற்பதில் மிகஆர்வம் உடையவர்கள் சகபாடிகளிடம் நட்புறவை பேணி வருகின்றனர். ஆசிரியைகள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அவர்களுக்கு கவ்வித்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று தலைமையாசிரியை கூறியுள்ளார்.
அங்கு கற்கும் மாணவிகளுக்கு பாடசாலை சீறுடையும் கற்றல் உபகரணங்களையும் வழங்குவதுடன் ஆங்கிலம் கற்க அனுசரணையும் வழங்கி வருகின்ற உள்துறை அமைச்சு இந்த விடயத்தில் சட்டரீதியான பார்வையைச் செலுத்துகிறது.
தந்தை கடத்தப்பட்டு வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டார் என நான் உதாரணமாக கூறுகிறேன் என்றும் ஹக்ஸ் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment