வைகோவை நாடு கடத்த வேண்டும்:நடிகர் கார்த்திக் ஆவேசம்
தேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார்.
அப்போது, ’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.
நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை’’ என்று ஆவேசப்பட்டார்.
நக்கீரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment