புறாக்கள் மூலம் சிறைக்கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் கடத்தல்
பிரேசிலிலுள்ள சிறைக்கைதிகள், புறாக்கள் மூலம் கையடக்கத் தொலைபேசிகளை வர வழைத்து பயன்படுத்தும் இரகசியம் அம்ப லமானதையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
சாவ்பாலோ நகரிலிருந்து சுமார் 62 மைல் தொலைவிலுள்ள ஸொரோகபா எனும் இடத்தில் அமைந்த சிறைச்சாலைக்கு இரு புறாக்கள் மூலம் கையடக்க தொலைபேசிகள் காவப்பட்டு வந்ததை சிறைச்சாலை காவலதிகாரிகள் கண்டுபிடித் ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற் பட்டது.
டானிலோ பின்ஹெய்ரோ சிறைச்சா லைக்கு வெளியே மேற்படி புறாக்களை கண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அப் புறாக்களின் உடலில் சிறிய பை ஒன்று கட் டப்பட்டிருப்பதை அவதானித்து அவற்றை பிடித்ததாகவும், அந்த பைகளில் தலா ஒரு கையடக்க தொலைபேசியும், அதற்கான மின் இணைப்பு வசதியும் இருந்ததாகவும் பாதுகாப்பு பிரிவு பேச்சாளர் றொஸானா அல்பேர்டோ தெரிவித்தார்.
இவ்விரு புறாக்களும் இரு வேறு தினங்க ளில் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
ஊழல் மிக்க சிறைச்சாலை பாதுகாவலர்கள் சிறைக்கைதிகளுக்காக மேற்படி கையடக்க தொலைபேசி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படு கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment