இராணுவ நடவடிக்கை தொடரும்- லெப் ஜென் பொன்சேகா
இலங்கையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை தொடரப்போவதாக இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்கும்வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
பொதுமக்கள் அந்த மோதலற்ற பகுதியில் சிக்கியிருப்பதாகவும், தீவிரவாதிகளால் மனிதகேடயங்களாக அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சரத்பொன்சேகா குற்றம் சாட்டினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் பிரதேசம் தொடர்பில் தமக்கு பொதுவான தகவல்கள் இருப்பதாகவும், ஆனால் அவர் மறைந்திருக்கும் குறிப்பிட்ட இடம் எது என்று தம்மிடம் தகவல்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் மத்தியில் அவர் மறைந்திருக்கக்கூடும் என்றும், அதனால் அவரை கையாள்வது தொடர்பில் தாம் மிக கவனமாக இருக்கவேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment