முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக 13 சிவிலியன்கள் உணவின்றி இறந்ததாகவும் போதிய மருத்துவ வசதிகளின்றி 500 பேருக்கு மேற்பட்டோர் மரணமானதாகவும் இவர் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது .






0 விமர்சனங்கள்:
Post a Comment