புதுக்குடியிருப்பில் படையினர் தேடுதல், 13ஆயிரத்து 44 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது 64பீப்பாய்களில் நிரப்பப்பட்ட 13ஆயிரத்து 44 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 15வெற்றுப் பீப்பாய்களை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதலில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர்கள், படகு வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்ட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவ 2ம் அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பில் பாரிய தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்து ஒவ்வொன்றும் 210லீற்றர்களைக் கொண்ட 64பீப்பாய்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பில் 57படைப்பிரிவினர் நடத்திய சோதனையின்போது
9குதிரைவலு கொண்ட படகு இயந்திரம் 01,
60மி.மீ ரக குண்டுகள் 08, 12.5கிலோ எடைகொண்ட கிளைமோர் 03,
02கிலோ எடையுள்ள கிளைமோர்கள் 03,
1.5கிலோ எடையுள்ள கிளைமோர் 01,
கிரனைட்டுகள் 53,
ரி56 துப்பாக்கி ரவைகள் 750,
எப்.என்.சி ரவைகள் 3000,
ரி56 துப்பாக்கிகள் 08 என்பவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment