புலிகள் வசமிருந்த ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் மீட்பு!!
புலிகள் வசமிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலரின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விபரமடங்கிய ஆவணமும் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதுதவிர அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளினதும் மற்றைய அமைச்சர்களினதும் விபரங்கள் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் இந்த ஆவணங்களில் இருந்துள்ளதாக அவர் கூறினார் இந்த ஆவணங்கள் மக்கள் பாதுகாப்பு வலயத்தை அண்மித்த வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment