59வது படையணி வட்டுவாகல் பாலத்தை மீட்டுள்ளது
பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையில் 59வது படையணி இன்று (மே. 12) காலை முல்லைத்தீவு நகருக்கு வடக்கே உள்ள வட்டுவாகல் பகுதியையும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தை விடுவித்துள்ளனர். இந்தப் பாலம் மீட்கப்பட்டதை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இராணுவ நடவடிக்கையென படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கை அதன் இறுதி நாட்களை நெருங்க உள்ளதை உறுதியுடன் தாம் சொல்லமுடியுமென மேலும் தெரிவித்துள்ளனர். பிரிகேடியர் பிரசன்ன சில்வா அண்மையில் படைத்துறை தலைமையகத்தால் 59வது படையணியின் புதிய கட்டளை தளபதியா நியமிக்கப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment