இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமையன்று கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய கடற்புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 14 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு படகுகளை படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
புதிதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற கடும் சண்டைகளைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
தரையில் நடைபெற்ற மோதல்களின்போது விடுதலைப்புலிகள் கடும் எதி்ர்ப்பைக் காட்டியதாகவும், இந்தச் சண்டைகளில் விடுதலைப்புலிகளின் 35 உடல்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்ட படகுகளில் ஒன்று விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதல் படகு என்றும், மற்றையது விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு என்றும் கைப்பற்றப்பட்ட படகு ஒன்றில் விடுதலைப்புலிகளின் இரண்டு இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.
இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவிலியன்களுக்கான பாதுகாப்பு பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவு பாலம் வழியாகத் தப்பி வந்த பொதுமக்கள் அடங்கிய குழு ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் வெள்ளிகிழமையன்று நடத்திய துப்பாக்கி்ப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 17 பொதுமக்கள் காயமடைந்ததாகவம் பாதகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
எனினும் இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment