இலங்கையில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் தவிப்பு
இலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொலைபேசி வசதிகளை அரசு பல மாதமாக துண்டித்து விட்டது. போர் உக்கிரமடைந்ததுவிட்டதன் காரணமாக புலிகளின் அனுசரணையுடன் நடத்தப்படும் செய்மதி தொலை பேசி வழியாக வன்னியில் இருப்பவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்வதும் குறைந்து விட்டது. மற்றொறு புறும் வவூனியா முகாம்களில் இருப்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாத நிலையும் உள்ளது.
இதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.
வவூனியா முகாம்களில் உள்ளவர்களின் வசதிக்காக தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நிவாரணக் கிராமங்களுக்கு தொலை பேசி இணைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்கள் இருக்கும் பகுதியில் வங்கிக் கிளைகள் திறக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வவூனியா முகாம்களுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்
இது தொடர்பாக புலம்பெயர்ந்தவர்கள் கூறும் கருத்துக்களை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம் .
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment