வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் குறித்து உண்மை நிலைவரத்தை எமக்கு அறியத்தர வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முள்ளிவாய்க்கால் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகர் பிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சதாசி்வம் கனகரட்னம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தை மீட்டுத்தர வேண்டும் அல்லது அவர் குறித்த உண்மை நிலைவரத்தை தமக்கு அறியத்தர வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சபாநாயகருக்க அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment