தயா மாஸ்டர் நீதிவான் முன்னிலையில் மூன்று மணித்தியாலம் வாக்குமூலம் -தடுத்து வைத்து விசாரிப்பதற்கு உத்தரவு
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி என்றழைக்கப்படும் தயா மாஸ்டர் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணித்தியாலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலரினால் கொழும்பு பிரதம நீதிவான் நிஸாந்த ஹப்பு ஆராச்சியின் முன்னிலையிலேயே தயா மாஸ்டர் ஆஜர்படுத்தப்பட்டார். புலிகளுக்கு உதவியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் முதல் தடவையாகவே நீதிமன்றில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். மூன்று மணித்தியாலம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியுடனும் பாதுகாப்பு அமைச்சின் தடுப்பு உத்தரவின் பேரிலும் அவர் புலனாய்வு திணைக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கியமை தொடர்பாக விரிவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தனர். புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் பாதுகாப்பு தரப்பினரால் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 விமர்சனங்கள்:
Post a Comment