இலங்கைக்கு திரும்பிச்செல்ல விரும்பும் அகதிகளின் விபரங்கள் தமிழகத்தில் சேகரிப்பு
இலங்கையின் உள்நாட்டு மோதல்கள் காரணமாகக் கடல்மார்க்கமாக வெளியேறி இந்தியாவின் தமிழக முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளில், இலங்கைக்குச் செல்லவிரும்புபவர்களின் பெயர்களை தமிழகப் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் கூயிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே இலங்கை செல்ல விரும்புபவர்களின் பெயர்களைத் தமிழகப் பொலிஸார் திரட்டிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது உயிருக்கும் உடமைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில் நாடுதிரும்ப தமிழக முகாம்களிலுள்ள ஈழத்தமிழர் விரும்புவதாகப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment