பிரித்தானிய பத்திரிகையின் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது
புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் இறுதி மூன்று வார காலத்தில், யுத்தப் பகுதியில் சிக்குண்டிருந்த பொது மக்கள் இருபதாயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னணி பிரித்தானிய நாளேடு ஒன்றை இலங்கை அரசாங்கம் வன்மையாகச் சாடியுள்ளது.
உறுதிசெய்யப்படாத தகவல்கள் மற்றும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை `த ரைம்ஸ்` நாளேடு நடத்திவருவதாக இலங்கையின் வெளியுறவுத்துறைச் செயலரான பாலித கோஹொன தெரிவித்துள்ளார்.
வெறுக்கத்தக்க பயங்கரவாதக் குழுவொன்றை இலங்கை அரசாங்கம் அழித்துள்ளது என்றும், மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்டிருந்த பணயக் கைதிகள் என்று குறிப்பிட்டு அவர்கள் இரண்டரை லட்சம் பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
யுத்தத்தால் நிர்மூலமாக்கப்பட்டிருந்த ஓர் இடம் என்று கூறப்படுகின்ற ஓர் இடத்தைக் காட்டும் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் `த ரைம்ஸ்` பத்திரிகை பிரசுரரித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment