புலிகளிடமிருந்து பாடம் கற்றதாக மனிப்பூர் போராளி அமைப்பு அறிவிப்பு
இலக்கை வென்றெடுக்க இராணுவப் பலம் மட்டும் போதாது என்பதை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அனுவம்மூலம் பாடம் கற்றிருப்பதாக இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை இராணுவம் எனும் அமைப்பு கூறியுள்ளது.
“எமது இலக்கை அடைவதற்கு பலம் மாத்திரம் போதுமானதல்ல. எமது போராட்டத்தை முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். இதற்கு இந்தியாவிலிருந்தும் ஆதரவைத் திரட்டவுள்ளோம்” என மக்கள் விடுதலை இராணுவத்தின் உபதலைவர் மனோகர் மயூன்னுகோபா கூறியிருப்பதாக ரெலிகிராப் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரச்சினைத் தீர்வுக்கு சமாதானப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலானது இறைமையாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் அல்லது புரட்சகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் தாம் பாடம் கற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மனிப்பூரின் இறைமைக்காகப் போராடும் நோக்கில் 1978ஆம் ஆண்டு மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment