அரசாங்கம், சர்வதேசத்தை பகைப்பது தவறென்பது உணர்த்தப்படும்: த.தே.கூ
இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்தை பகைப்பது தவறென்பது விரைவில் உணர்த்தப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு மோதல்களை நடத்துவதற்கு வெளிநாட்டுப் பணம் தேவையென்பதுடன், இந்திய அரசாங்கத்தின் ஆயுத உதவிகள் தேவையெனவும் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை என்.சிறிகாந்தா சுட்டிக்காட்டினார். எனினும், சர்வதேச சமூகத்தின் அறிவுரைகள் இலங்கை அரசாங்கத்துக்கு தேவையில்லையெனவும் அவர் கூறினார். இந்த நிலையில், சர்வதேச சமூகத்தைப் பகைப்பது முட்டாள்த்தனமென்பதை இலங்கை அரசாங்கத்துக்கு உணர்த்தப்படுமெனவும் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
அரசியல்த் தீர்வுகாண்பதற்கான நேரம் இன்னமும் கடந்துவில்லையெனக் கூறிய அவர், தற்போதுகூட விடுதலைப் புலிகளும், தாமும் அரசியல்த் தீர்வு காண்பதற்கு தயாராகவேவிருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டுவதாகவும் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment