அரை நிர்வாணப் புகைப்படங்களால் அழகுராணி பட்டத்தை இழக்கும் நிலை


அமெரிக்க கலிபோர்னிய மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கேரி பிறிஜீன், அவரது அரை நிர் வாணப் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, தனது அழகுராணிப் பட்டத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மேற்படிப் படங்களை மறைத்து வைத்து தனது ஒப்பந்தத்தை மீறும் வகையில் கேரி பிறிஜீன் நடந்து கொண்டுள்ளதாக இந்த அழகுராணிப் போட்டியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தான் 17 வயதில் மொடல் அழகியாக இருந்த போது மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கேரி பிறிஜீன் தெரிவித்தார்.
ஒரே பாலினத் திருமணங்களுக்கு எதிராக பாரம்பரிய திருமணங்களை பாதுகாப்பது தொடர்பான தனது கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரி பிறிஜீன் தெரிவித்தார்.
""நான் ஒரு கிறிஸ்தவப் பெண். அத்துடன் நான் ஒரு மொடல் அழகி. மொடல் அழகிகள் அரை நிர்வாணமாகவும், நீச்சலுடையுடனும் புகைப்படங்களுக்காக தோற்றமளிப்பது வழமையாகும்'' என்று கூறினார்.
இந்நிலையில், இரண்டாம் சுற்று கலிபோர்னிய அழ குராணிப் போட்டியை நடத்துவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment