புலிகளின் தொலைக்காட்சி ஊழியர்கள் விசேட முகாமில் விசாரணை
வன்னியில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த ‘தமிழீழ தேசிய தொலைக்காட்சி` NTT (National Television of Tamil Eelam) ஊழியர்களாக இருந்த பலர் மக்களோடு மக்களாக பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேறி படையினரிடம் சரணடைந்தனர். தமது அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களோடு இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்த இவர்கள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டு மேலதிக விசாரணைக்காக விசேட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் `நிலவரம்` நிகழ்ச்சி நெறியாளர் வீரா, புலிகளின் கலை பண்பாட்டுத்துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் உள்ளனரா என்பதை அறியமுடியவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment