ராஜீவ் காந்தியை கொன்றமை புலிகள் செய்த மிகப்பெரிய தவறு - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ராஜீவ் காந்தியை கொலை செய்தமை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. இது அவர்கள் இந்தியாவின் அனுதாபத்தை இழப்பதற்குக் காரணமாகியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுளளார். இலங்கையில் தமிழர் பிரச்சினை வேர்விடத் தொடங்கியபோது இந்தியா அவர்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தது.
இறுதியில் அவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட இந்திய தலைவர் ஒருவரை கொலை செய்தனர் என ஜனாதிபதி கூறினார். 30 வருட காலத்தில் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு எது என ஜனாதிபதியிடம் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும் அவர் கூறினார்.
புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததா என வினப்பட்டபோது இல்லை நான் அப்படி எண்ணவில்லை. நண்பர்களுக்கிடையில் அழுத்தமோ வற்புறுத்தல்களோ இருக்கமுடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment