புலிகள் பிடியிலிருந்த சிறுவர்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளால் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை நிர்ப்பந்தப்படுத்தி தங்கள் இயக்கத்தில் சேர்த்து ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருவதாக இலங்கை ராணுவம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
.
இந்த நிலையில் புலிகளால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்க்கப்பட்ட ஆயிரக் கணக்கான சிறுவர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். அவ்வாறு சரணடைந்த அந்த சிறுவர்கள் விடுதலைப்புலிகளிடம் தாங்கள் பட்ட கொடுமைகளை விவரித்திருப்பதாக பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த சசி கனகரிகபிள்ளை என்ற சிறுவன் கூறும்போது,‘நாங்கள் பள்ளிக்குப்போவது வழக்கம். ஆனால் எப்போதும் மறைந்தே இருப்போம். நாங்கள் வீடுகளில் இருப்பது தெரிந்தால் விடுதலைப்புலிகள் பிடித்து சென்று விடுவார்கள். அவர்கள் எங்களுக்கு சில பயிற்சிகளைத் தந்து புலிகள் போராளிகளாக பயன்படுத்துவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நானும் அவர்களிடம் பிடிபட்டுக் கொண்டேன். அவர்கள் எனக்கு 2 மாதங்கள் பயிற்சி தந்தார்கள். ஆனால் நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்றும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். இதுபோன்று சரணடைந்த ஏராளமான சிறுவர்களும், அவர்களது பெற்றோர்களும் தற்போது அரசாங்கத்தின் அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அங்கு அவர்கள் புலிகள் இயக்கத்தில் தாங்கள் சந்தித்த பல்வேறு அதிர்ச்சிகரமான அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.
ராஜேந்திரா என்ற கிளிநொச்சி பள்ளி முதல்வரும் இது பற்றி கூறியிருக்கிறார். தன்னுடைய பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் போரில் உயிரிழந்து விட்டதாகவும், அவர்களை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தி தங்கள் படைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment