நிம்மதியான மனோநிலையில் இடம்பெயர்ந்த மக்கள்
வன்னியிலிருந்து இடம்பெய ர்ந்து வந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங் கியுள்ள மக்கள் தங்களுக்குரிய உணவை நேற்று முன்தினம் தொடக்கம் தாங் களாகவே சமைக்கத் தொடங்கி விட்டனர்.
வன்னியிலிருந்து வந்து சேர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம் ஆகும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று சேர்ந்து வந்ததனால் ஏற்பட்ட அல்லோல கல்லோலத்துக்கு மத்தியில் அம்மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவதே அரசாங்கத் தினால் ஆரம்பத்தில் பொருத்தமான காரிய மாக இருந்தது.
அனைத்தையும் அங்கேயே கைவிட்டு வந்து சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்களை தங்குமிடங்களில் தங்க வைப்பதே அரசாங்கத்தின் முதல் கட்டப் பணியாகும். இந்நிலையில் மக்க ளின் உணவுத் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்காக சமைத்த உணவு வழ ங்குவதே பொருத்தமான நடவடிக்கையாக இருந்தது.
எனினும் சமைத்த உணவை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதென்பது அம்மக்க ளுக்குத் திருப்தியளிக்கக் கூடியதல்ல... தங் களுக்குரிய உணவை தாங்களாகச் சமைத்து உண்ணவே அவர்கள் விரும்புகின்றனர்.
அதுமாத்திரமன்றி வவுனியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் பெரும் சனத்திரளின் மத்தியில் செய்வதறியாது கலங்கிக் கொண்டிருந்த மக்கள் சமைப்பதைப் பற்றி எண்ணிப் பார் க்கும் மனோநிலையில் ஆரம்பத்தில் இருக்க வில்லை.
ஆனால் அம்மக்களின் மனோநிலையில் தற்போது படிப்படியான ஆறுதல் ஏற்பட்டு வருகிறது. தாங்கள் தற்போது நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கின்ற போதிலும் அச்சமின்றி நிம்மதியுடன் இருப்பதை அவர்கள் உணர்கின்றனர்.
அரசாங்கம் துரிதகதியில் ஏற்படுத்தி வரு கின்ற அடிப்படை வசதிகளையிட்டும் வழங் கப்பட்டு வருகின்ற நிவாரண உதவிகள் குறித்தும் அம்மக்கள் திருப்தி தெரிவிக்கின் றனர். எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அம்மக்கள் மத்தியில் உள்ளதை அவதானி க்க முடிகிறது.
இந்நிலையில் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் அங்கு குடும்பக் கட்டமைப்புடன் வாழ்வதற்குத் தயாராகி வருகின்றனர். எனவே தங்களுக்குரிய உணவை தாங்களே சமைத்துக் கொள்வதே மக்களின் விருப்பமாக உள்ளது.
சமைப்பதற்கான உலர் உணவுப் பொருட் களை அரசாங்கம் வழங்கி வருவதனால் தங்களது உணவை தாங்களாகவே சமைத்து உண்பதென்பது திருப்தியளிப்பதாக இம்மக் கள் கருதுகின்றனர். குடும்பம் குடும்பமாக தாங்களாகவே சமைத்துண்பதென்பது இலகு வானதென்பதும் அவர்களது எண்ணமாகும்.
அம்மக்கள் தாங்களாகவே சமைத்து உண்ணத் தொடங்கி விட்டனரென்றால் அதன் அர்த்தம் அவர்கள் நிம்மதியடையத் தொடங்கியுள்ளனர் என்பதேயாகும்.
அதேசமயம் அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் மளிகைச் சாமான்களையும் தடையின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்க எதிர்ப்பு சக்திக ளும் சில ஊடகங்களும் மாறுபாடான கருத் துக்களைத் தெரிவித்து வருகின்றன. இச் சக்தி களின் நோக்கம் இன்றைய நிலைமையைத் திரிபுபடுத்துவதைத் தவிர வேறில்லை.
வன்னியில் தற்போது உருவாகியுள்ள மக்கள் இடம்பெயர்வானது சாதாரணமான தல்ல. இவ்விடம்பெயர்வு அதிகளவிலானது என்பது உண்மை.
ஆனால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களை உடனடியாகத் தங்க வைத்து நிவாரண உதவிகளை அவசரமாக வழங்குவதில் அர சாங்கம் தேவையான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறது. நிவாரண ஏற்பாடுகள் தொட ர்பாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் திருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே அங்குள்ள உண்மை நிலைவரமா கும். அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் ஒரு புறமிருக்க, வன்னி மக்களின் இன்றைய துயரைத் துடைப்பதற்காக தனியார் நிறுவன ங்களும் பொதுமக்களும் காண்பிக்கின்ற அக்கறை பெரிது.
தனிநபர்கள் வழங்குகின்ற நிவாரண உதவிகளும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் வன்னி மக்கள் நன்றியுடனேயே நோக்குகின்றனர்.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment