நூறு ஆண்டுகளாக பிறந்தநாளை தவறான தேதியில் கொண்டாடிய மூதாட்டி
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் நகரைச் சேர்ந்தவர் எமிலி டொனோகு. இந்த மூதாட்டிக்கு 100 வயது இவர், தான் மே 3ந் திகதி பிறந்ததாக நம்பிக் கொண்டி ருந்தார்.
அந்த திகதியில்தான் இதுவரை ஆண்டு தோறும் பிறந்த நாளை கொண்டாடி வந்தார்.
100 வது பிறந்த நாளை முன்னிட்டு இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்து தந்தி பெற எமிலி டொனோகுவின் குடும்பத் தினர் விரும்பினர். அதற்கு பிறப்பு சான்றி தழ் அனுப்பி வைப்பது அவசியம்.
அதன்படி, பிறப்பு சான்றிதழை தேடி எடுத்து பார்தபோதுதான் அக்குடும்பத்தி னருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதில், பாட்டியின் பிறந்த திகதி மே 5 என்று இருந்தது. ஆனால், தவறுதலாக இத்தனை ஆண்டுகளாக அவர் மே 3 ந் திகதி தனது பிறந்த நாளாக கருதி, கொண்டாடி வந்து ள்ளார். ஆனால் பாட்டி விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எனவே, அவரது விருப்பப்படி மே 3 ந் திகதியும், குடும் பத்தினர் விருப்பப்படி மே 5 ந் திகதியும் இரண்டு நாட்கள் பிறந்த நாள் கொண் டாடப்பட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment