புகலிடம் மறுக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்ப சுவிட்ஸலாந்து தீர்மானம்
சுவிட்ஸலாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸலாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சுவிட்ஸலாந்தில் புகலிடம் கோரிவிண்ணப்பித்து, புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக இந்தவார ஆரம்பத்தில் சுவிட்ஸலாந்து பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்குமிடையில் நடைபெற்ற மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸலாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகளுக்குத் திருப்பியனுப்பாமல் தடுத்துவைப்பது பிழையான கருத்தை வெளிக்காட்டிவிடும் என சுவிட்ஸலாந்தின் நீதி அமைச்சர் எவிலின் விட்மன்-ச்லம்ஃப் தெரிவித்தார்.
மே மாத நடுப்பகுதியில் மாத்திரம் புகலிடம் கோரி புதிதாக 662 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இதனைக் கருத்தில்கொண்டு குடிவரவு அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை மிகவும் அவதானமாகப் பரிசீலிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களில் நான்கில் ஒரு பங்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களைக் கொண்டிருப்பதில்லையெனக் குறிப்பிட்ட அவர், எனினும், இலங்கையில் பிரச்சினையுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாரும் திருப்பியனுப்பப்படமாட்டார்கள் எனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment