தங்களை கவனிக்கமுடியாதவர்களை உறவினர்கள் பொறுப்பேற்கலாம்: அரசாங்கம்
முகாம்களில் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாமலிருக்கும் முதியோர்கள், அங்கவீனமானவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களின் உறவினர்களுடன் இணைவதற்கான சந்தர்ப்பமொன்று வழங்கப்படவிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. இவர்களைப் பொறுப்பேற்கவுள்ளவர்கள், உறவினர்கள் என்ற அடையாளத்தையும், கவனித்துக்கொள்வதற்கான நிதி ஆதாரத்தையும் உறுதிப்படுத்தி பொறுப்பேற்கமுடியுமெனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது.
ஜனாதிபதி செயலகத்தில், இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment