யுத்தசூனியப் பிரதேசத்துக்கு உணவுப் பொருள்களை அனுப்பவிடாது விடுதலைப் புலிகள் இடையூறு
யுத்தசூனியப் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணத்தை அனுப்பிவைப்பதற்கு விடுதலைப் புலிகள் இடையூறு விளைவிப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடல்மார்க்கமாக மோதல்சூன்யப் பகுதிக்குள் உணவுப்பொருட்களை அனுப்புவது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்திருக்கிறார்.
மோதல்சூன்யப் பகுதிக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிவாரண விநியோக வசதிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக புலிகளை ஐ.சி.ஆர்.சி.வலியுறுத்த வேண்டும் என்றும் திவாரட்ண கூறியுள்ளார்.
அதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும்,
ஆனால் இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை தாங்கள் கோரியிருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி.அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது தொடர்பாக அனுமதி அளிப்பதில் முழுஅளவில் ஈடுபாட்டுடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருப்பதாக பி.ரி.ஐ.செய்திச்சேவை தெரிவித்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment