சோனியாகாந்தியின் தமிழகப் பயணம் ரத்து

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மக்களவை தேர்தலுக்காக சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தார்.
சென்னை தீவித்திடலில் முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியாகாந்தி மட்டும் இன்று மதியம் சென்னை வந்து பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டது. சோனியாகாந்தியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் சென்னை வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment