`சந்திக்க மறுத்து அடம்பிடிக்கும்` தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் இன்று (மே. 5) மாலை சந்தித்து வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளை நடத்தவிருக்கின்றன.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் உடனடி நிவாரணம் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவங்கள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்று கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் கலந்துகொண்டன.
இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்றைய தினம் நடத்தவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை, கூட்டமைப்பு தட்டிக்கழித்து வருவதையே `சந்திக்க மறுத்து அடம்பிடிக்கும்` முடிவு எடுத்துக் காட்டுவதாக தனது பெயரை வெளியிடவிரும்பாத கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment