இலங்கைத் தமிழர்களின் சொதி
சொதி இலங்கைத் தமிழர்களின் சமையலில் முக்கியமானதாக இருந்தலும் அது செட்டிநாட்டிலிருந்து தான் இலங்கைக்கு வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் நண்பர் ஒருவர், சொதியின் விவரத்தைச் சொன்னார். இன்றும் அவர்களும் சொதி என்றுதான் அழைக்கிறார்கள்.
இராமநாதபுரத்துக்கும் யாழ்ப்பாண அரசுக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததால் சமையல் கலை பரவியிருக்கலாம். அதை விட யாழ்ப்பாண அரசர்கள் இராமநாதபுரம் அரச குடும்பத்தில் தான் பெண்கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். அதைவிட வண்ணார்பண்ணையில் பல நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலையும், பெருமாள் கோயிலையும் கட்டியது அவர்கள் தான்.
ஆனால் அவர்கள் யாழ்ப்பாண வெள்ளாளர்களுடன் கலந்து செட்டி வெள்ளாளர் என்ற சாதி இலங்கையில் ஏற்பட்டது. ஆறுமுகநாவலரின் தமக்கையார் மணந்ததும் ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரைத் தான். அதனால் செட்டிநாட்டுச் சொதி இலங்கைக்கு வந்து எங்களிடம் தங்கி விட்டது. பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களின் சாப்பாட்டில் சொதியின் இடத்தைத் தயிர் பிடித்துக் கொண்டது.
தொகுப்பு: கே. ஷர்மிளா






0 விமர்சனங்கள்:
Post a Comment