பிரபாகரனின் உடலைக் கண்ட செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கள்
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்ற முல்லைத்தீவின் கடற்கரைப் பிரதேசத்துக்குச் செல்ல செய்தியாளர்களை இலங்கை அரசு தொடர்ந்து அனுமதிக்காமல் இருந்தது. இருந்தும் சில செய்தியாளர்கள் இராணுவத்தினரால்
அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த 6 நாட்களாக கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.
பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.
பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது தெளிவாகாமல் உள்ளது என்றும், அந்த உடலில் சைனைட் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என்று படையினர் தம்மிடம் கூறியதாகவும் ரெட்டி நம்மிடம் தெரிவித்தார். அவர் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பிரபாகரனின் உடல் தவிர இராணுவ அதிகாரிகள், சார்ள்ஸ் அன்டனி உடலை காட்டியதாகக் குறிப்பட்ட அவர், பொட்டு அம்மானின் உடலை பார்க்கவில்லை என்றார். போர் பகுதியில் உள்ள உடல்களில் சில மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment