தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று வெள்ளையடிக்கவேண்டாம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று வெள்ளையடிக்கவேண்டாமென இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியுடனான சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் படுகின்ற துன்பத்தையும், அவர்கள் இருக்கின்ற சூழ்நிலைகளையும் மிகத் தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறவேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் இராணுவ மயமாக்கப்பட்ட, சிங்கள மயமாக்கப்பட்ட நிர்வாகத்தின் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த மக்கள் வெளியாருடன் பேசமுடியாத கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஜப்பான் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது உதவிசெய்ய விரும்பினால், இந்த மக்கள் மீள்குடியேறுவதற்கான வசதிகளை செய்துகொடுக்கவேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். இது தவிர, ஜப்பான் அரசாங்கம் இந்த மக்கள் நிரந்தர அடிமைகளாக இருப்பதற்கான எந்தவொரு உதவிகளையும் செய்யக்கூடாதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment