தலைவர்களின் தவறான தீர்மானங்களுக்காக பொதுமக்களுக்கான உதவியை ஏன் குறைக்கவேண்டும? யசூசி அகாசி
சமாதானத்தை அடையமுடியாமைக்கு தலைவர்களின் தவறான மதிப்பீடுகள், தவறான தீர்மானங்கள் காரணமாக அமையலாமெனக் கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய யசூசி அகாசி, இதற்காக பொதுமக்களின் நல்வாழ்வுக்கான உதவித் தொகைகளை குறைப்பதன் மூலம் அவர்களை ஏன் தண்டிக்கவேண்டுமெனவும் கேள்வியெழுப்பினார்.
இதுவே ஜப்பான் அரசாங்கத்தின் அணுகுமுறையென்பதுடன், இந்த நாட்டில் சமாதானம் ஏற்படவேண்டுமென்ற அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் கூறினார். தமது கரிசனைக்குரிய விடயமாக மோதல்ப் பகுதியில் சிக்குண்டிருக்கும் மக்களைப் பற்றியதேயெனவும் யசூசி அகாசி குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதத் தாக்குதல்களை நடத்துவதில்லை என்பதனை தொடர்ந்து கடைப்பிடிக்குமென தான் நம்புவதாகவும் யசூசி அகாசி தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment