ஜரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அடுத்தவாரம் இலங்கை வருகை!
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வர இருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவம் அடுத்து வர இருக்கும் தலைமைத்துவம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக்குழுவில் அங்கம் வகிக்கவிருக்கின்றனர். .
இலங்கையின் அரசியல், மனித உரிமைகள், மனிதாபிமான நிலவரங்கள், வர்த்தக மற்றும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இவர்க்ளுடன் பேசப்படவிருப்பதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 விமர்சனங்கள்:
Post a Comment