வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் படையினர் இறுதி நடவடிக்கை.

அரசினால் பொது மக்களின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட `யுத்த சூனிய வலயம்` புலிகளால் `மோதல் பிரதேசம்` ஆக மாற்றப்பட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மனித கேடயமாக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டும் `வன்னி மனிதாபிமான நடவடிக்கை` இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று (மே. 5) அறிவித்துள்ளது. வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரன் உட்பட எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்கள் 4.5 சதுர கிலோ மீட்டரைவிட குறைவான மிகச்சிறிய நிலப்பரப்பினுள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய பகுதியான வெள்ளமுள்ளி வாய்க்காலை நோக்க கரையாமுள்ளி வாய்க்காலுக்கு தெற்காக 53வது மற்றும் 58வது படையணிகள் முன்னேறி வருகின்றன. அதேவேளை வட்டுவாகல் பகுதில் இருந்து வடக்காக 59வது படையணி முன்நகர்ந்து வருகிறது. படை நடவடிக்கையின் முடிவிடமாக கூறப்படும் வெள்ளமுள்ளி வாய்க்கால் மூன்று முனைகளில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment