புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் விடுத்த கோரிக்கையினை அடுத்தே அரசாங்கம் குறித்த பரிசோதனையைச் செய்வதற்கான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக அரசாங்கமும் படைத்தரப்பும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment