புல்மோட்டை முகாமில் நகை அடகுசேவை
புல்மோட்டை அகதிகள் முகாம்களில் குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்கப்படுவதாக வெளிவந்த செய்திகளை அடுத்து அந்த முகாம்களில் நகை அடகு சேவையொன்றை புல்மோட்டை மக்கள் வங்கிக் கிளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம், அரபாத் நகர் முஸ்லிம் வித்தியாலயம், புல்மோட்டை சிங்கள வித்தியாலயம் அகிய அகதி முகாம்களிலேயே இந்த நகை அடகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து அகதிகளாக வந்த மக்களிடம் "தவிச்ச முயல்' அடிக்கும் வகையில் சில மனிதாபிமானமற்றவர்கள் நகைகளை பவுண் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா வீதம் பல பவுண்களை வாங்கிவந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியானதை அடுத்தே புல்மோட்டை மக்கள் வங்கிக்கிளை நகை அடகு சேவையை அகதிமுகாம்களில் ஆரம்பித்துள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment