இனப் பிரச்சினையும் இன சம்ஹாரமும்
இன சம்ஹாரம் (இனப்படுகொலை) சம்பந்தமான கோட்பாடுகளை முன்வைத்த கோட்பாட்டாளர்கள் அத்தகைய சம்ஹாரம் சர்வாதிகார இராஜ்யத்திற்குள் மட்டுமே நடக்கக்கூடியதாக இருக்கும் என்றே எண்ணினார்கள்.
ஆனால், அந்தக் கருத்துக்கு சவால் விடும் வகையிலான விடயங்களை கொண்டதாக மைக்கல் மாண் (Michel Mann) எழுதிய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம் (The Dark Side of Democracy) என்ற பெயர் கொண்ட ஆய்வு நூல் திகழ்கின்றது. அவ்வாய்வு நூலின் படி ஜனநாயகம் என்ற மறைப்புக்குள் ஒளித்துக்கொண்டு தேசிய இராஜ்யங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனங்களை வெளியேற்றுதல் மற்றும் இன சம்ஹார (இனப் படுகொலை) செயற்பாடுகளை மேற்கொள்கின்ற கருத்திட்டங்கள் அ?லாக்கப்படுகின்றமை அருமையாக காட்டப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய இராஜ்யம் சிறுபான்மை இனங்களுடன் பரிமாறிக்கொள்கின்ற செயற்பாடுகள் பேரினவயப்படுத்தல் (Assimilation) முதல் இன சம்ஹாரம் வரை வி?வாகிச்செல்கின்ற முறைமைகள் எவ்வாறான தன்மைகளை கொண்டிருக்கும் என்பது பற்றி ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மக்களால் மக்கள் ஆளப்படுகின்ற ஜனநாயக முன்மாதிரியானது பெரும்பான்மையின் ஆட்சிக்கு கீழ்ப்படிந்து அல்லது பெரும்பான்மையினத்தவரின் ஜனநாயகமாக ஆகும்போது ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உள்(ளார்ந்த) அமைப்பியல் சார்ந்த தேசியத்துவம் (Organic Nationalism) உருவாவதை தடுக்க முடி யாது.அவ்வாறான சூழ்நிலையில் பெரும்பான்மையினத்தாரை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜ்ய தேசியம் (State Nation) மற்றும் சிறுபான்மையினத்தாரை பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்துவ தேசியம் (Ethnic Nation) ஆகிய இரண்டு சாராருக்கும் ஒரே நாட்டில் தன்னாதிக்கம் செலுத்துவதற்காக ஒருவரையொருவர் கொன்றொழிக்கும் வன்முறை போராட்டமாக மாறும்தன்மை ஏற்பட்டே தீரும். அப்போது அங்கு போராட்டமானது இரண்டு இனரீதியான இயக்கங்களின் போராட்டங்களாகத்தான் தோன்றும். அவ்விரு இயக்கங்களுக்கும் இவ்விரு இனங்களினதும் இனவயமான அங்கீகாரம் கிடைப்பதனாலேயேயாகும். 1976இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) இற்கு வேறொரு இராஜ்ஜியத்திற்கான இன ரீதி வயமான அங்கீகாரம் அம்மக்களிடமிருந்து மிகத் தெளிவாகக் கிடைந்திருந்ததோடு மஹிந்த ராஜபக்ஷவிற்கு 2005இல் சிங்கள இராஜ்யத்திற்கான, ஒற்றை யாட்சிக்கான, ஒரே இராஜ்ஜியத்தின் மக்கள் வரம் சிங்கள இனத்திடமிருந்து கிடைத்திருந்தது. சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு இனங்களும் ஒன்றுக்கொன்று எதிர்க்கும் இரண்டு இனக்குழுக்களாகி பல தசாப்தங்களாக வளர்ந்த எதிரெதிர் தன்மைகள் இவ்வாறாக உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது எனலாம்.
தமிழ் இனத்தவர்களுடைய அபிலாஷைகள் வெறும் கனவு இராஜ்யமாக மட்டுமே இருந்து விடாமல் சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படி உண்மையான இராஜ்யமாக அதாவது (Defeat to Tamil State of Elam) வளர்ச்சியடைந்தமையானது இராஜ்யத்தினுள்ளே செயலுரு பெற்ற பெரும்பான்மை ஜனநாயகவாத Majoritarion Democracy சித்தாந்தங்களுக்கு ஏற்பவேயாகும். "ஜனநாயகவாதத்தை கொன்றொழிக்கும் சிறந்த முறைமை எது வெனில் பெரும்பான்மை ஜனநாயக முறைமைதான் என்பதை ஆர்தர் லூவிஸ் என்பவர் வெளிப்படுத்தியமை எவ்வளவு பொருத்தமானது என்று நான் நினைக்கின்றேன். அந்த நிலைமை மிகக் கஷ்டமான பயணத்தின் பின்னர் படிப்படியாக நிலையற்ற தன்மைக்கு உள்ளாகி இன்று வரையாகும்போது தோல்வியடையும் நிலைக்கு வந்துள்ளது. தமிழ் தேசியவாதம் இறுதியில் எல்.ரி.ரி.யின் கட்டுப்பாட்டுக்குள் அடிமைப்பட்டது போலவே சிங்கள தேசியவாதம் ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடிமைப்பட்டுவிட்டதால் எல்.ரி.ரி.ஈ.யை அழித்தொழிப்பதோடு தமிழ் தேசியவாதத்தை அடக்கியொடுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்திட்டமாக உருவாகியுள்ளது.
மஹிந்தவின் இந்தக் கருத்திட்டத்தினால் எல்.ரி.ரி.யை அடியோடு கொன்றொழிப்பது மிகவிரைவான துரித நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கருத்திட்டத்திற்கு முன்னராகவே காலங்காலமாக தமிழ் தேசியவாதத்தை ஓர் ஒழுங்கு முறையின் கீழ் கட்டுப்படுத்தி ஒடுக்கும் வகையிலான பேரினமயமாக்கல் செயல் ஒழுங்கு - இராஜ்யத்தினுள் அமுலாக்கப்பட்டு வந்துள்ளது. அவற்றின் சில தன்மைகளை இராஜ்யத்தில் காணக்கூடியதாக இருக்கின்றன. அவை:
1. பெரும்பான்மையினருக்கு சிங்களவர்களுக்கு ச?கக் கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் யாவற்றிலும் ஆதிபத்திய அதிகாரம் உரித்தாகியமை.
2. சிறுபான்மையினருக்கு அந்த சமூகக் கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் யாவற்றிலும் குறைவான பங்களிப்பு இருந்து வந்தபோதிலும் இன்றைய நிலையில் எவ்வித பங்களிப்புமில்லாத வெளியேற்றத்திட்ட தன்மை ஏற்பட்டுள்ளமை.
3. நடைமுறையிலிருக்கின்ற நிறைவேற்றதிகார முறைமையின் கீழ் ஒரு இனத்தவர் மட்டுமே ஆதிபத்தியம் செலுத்தும் அதிகாரம் பெறுகின்றமை எனலாம்.
அதன்படி தமிழ் தேசியவாதத்தை கட்டுப்ப டுத்தி ஒடுக்கும் செயல்கள் பல்வேறு துறைகளிலும் அ?லாக்கப்பட்ட கருத்திட்டமாக திகழ்கின்றது. அது கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் என அமுலாக்கப்பட்ட கருத்திட்டமாகும். அரசகருமமொழி ஒழுங்குவிதி முறை சட்ட மசோதாவில் தொடங்கி யாழ்ப்பாண நூல் நிலையத்தை தீயிட்டு கொளுத்தியது வரை தமிழ் மக்களுடைய கலாசாரத்தை குறைத்து மதிப்பிட்டும் காலடியில் போட்டு மிதித்தும் 1956?தல் 1983 வரை அடிக்கடி தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இனக்கலவரங்கள் மூலம் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்தி தமிழ?ன் வர்த்தக வியாபார ஆதிக்கத்தை சதித்திட்டம் வகுத்து சிங்களவர்களின் கைகளுக்கு தந்திரமாக மாற்றிய செயலொழுங்கு, தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற மேற்கொண்ட நாகரிகமற்ற முயற்சிகள் காலத்துக்குக்காலம் இடம்பெறு கின்ற பதிவு செய்தல் மற்றும் சுற்றிவளைத்து சோதித்தல் போன்ற செயற்பாடுகளின் காரணமாக கொழும்பில் இருக்க முடியாத நிலைமைக்கு அவர்கள் உள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற அளவுக்கு இன்னும் மேற்கொண்டுவரும் சகல விதமான செயல்பாடுகளும் அக்கருத்திட்டத்திற்கு உள்ளாகியமையாகும். இவைகள் யாவும் இன சம்ஹாரத்திற்காக திட்டமிடப்பட்ட செயற்பாடுகளின் தன்மைகள்(இலட்சணங்கள்) இல்லையா என்பது எனக்கென்றால் பிரச்சினையாகத்தான் தெரிகிறது. ஏனெனில் அவற்றுள் அனேகமானவை எல்.ரி.ரி.ஈயை அழிப்பதற்கு முன்னரே இராஜ்யத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான ஒரு சில செயற்பாடுகள் மட்டுமேயாகும்.
இவை யாவற்றையும் கவனித்துப்பார்க்கும் போது இவையெல்லாம் செய்யப்படுவதற்குரிய காரணம் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள கடும் வைராக்கியம் தானோ என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்கள் இராஜ்யத்தின் பேரினமயமாக்கல் செயற்பாட்டுக்குள் சிக்கிவிடாமல் அதற்கு எதிராக போராடுவதற்கு எடுத்த முடிவு தான் காரணமா என்பது அடுத்த கேள்வியாகும். தமிழர்களுக்கும் நூறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய தொன்மைமிக்க புராதன மொழியும் கலாசார வரலாறும் இருப்பதானது அந்த வைராக்கியத்துக்கு காரணமாகியதா?
இன சம்ஹாரம் இங்கு இடம்பெறாததால் அனேகம்பேர் இன சம்ஹாரம் என்று சொல்வது இலங்கைக்கு பொருந்தாது என எதிர்வாதம் செய்ய முன்வந்துள்ளனர். அதைப் போலவே இனப்பிரச்சினையொன்று இங்கே இல்லையென்று சொல்கின்ற ஒரு சாராரும் இருக்கின்றனர். இதற்கு ஒரு காரணம் உண்டு.
அதாவது, 1983 இல் இடம்பெற்றது போன்று மக்கள் தொடர்புபட்டு பிரசித்தி பெற்ற மாதிரியான சம்ஹாரம், திட்டமிட்ட படுகொலைகள் நடைபெறுவதற்கு?ய சந்தர்ப்பங்கள் வாய்க்காது என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
அனேகம்பேர் அந்த மாற்றத்தை பெருமைக்குரிய உதாரணமாக காணுகின்றார்கள். ஆனாலும் இராஜ்யத்தில் இனவாத அரசியல் யாப்பு சட்டவிதி?றைகள் அப்படியே தான் இருக்கின்றன என்பதையும் இராஜ்யத்தை வழிநடத்துகின்ற இனவாத மேல் மட்ட சந்ததியினர் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதையும் இராணுவம், பொலிஸ், சிவில் சேவை என்பவற்றுள் உண்மையாகவே இனவா?யாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. (சிங்கள இனவயமாக்கப்பட்டுள்ளது) அதைப்போலவே தேர்தலின்போது தெற்கு வாக்காளர்கள் யுத்தத்தை அங்கீகரித்து இனரீதியான அடிப்படையில் வாக்களிக்கின்றார்கள் என்பதையும் இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
அவ்வாறாயின் இனப்பிரச்சினை இங்கு இல்லையென எவராலும் சொல்ல முடியுமா? இன சம்ஹாரம் இல்லையென சொல்லுகின்றவர்கள் முன்வைக்கின்ற ஒரு விடயம்தான் அரசு சிங் கள மக்கள் சகல தமிழ் மக்களையும் அடியோடு கொன்றொழிப்பதற்கு அனுமதி கொடுக்காததோடு அதனை விரும்பாதுள்ளது என்பதேயாகும். பிரிவினை கோரும் பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுப்போரையும் மட்டுமே அழித்து விடுவதற்கான அனுமதி கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவேதான் இதில் அரசியல் சம்ஹாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாக தென்படுகின்றது.
இன சம்ஹாரம் ஆனது ஐக்கியநாடுகள் சபையின் சட்டத்தின்படி குற்றமாகும். ஆனால், அரசியல் சம்ஹாரம் அப்படி அல்ல. இன சம்ஹாரம் குற்றமான செயல் என ஐக்கிய நாடுகள் சபையினால் சட்டமாக்கப்பட்டபோது வேறு உரிமைகளை கோருகின்றவர்களினால் அரசியல் சம்ஹார?ம் அதனுள் சேர்க்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அனேக அங்கத்துவ நாடுகள் அச்சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்புக் காட்டின. இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடக்கியொடுக்கும் செயல் தொடராக துரிதப்படுத்தப்பட்டமை 1970 ஆம் தசாப்தங்களின் பின்னர்தான் என்பது தெரிகிறது. 1972 இற்கு ?ன்னர் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமை சட்ட மசோதா மற்றும் மொழி தொடர்பான மசோதா போன்றவை நேரடியாகவே இனவாத தன்மையை கொண்டவையான போதிலும் அதிகளவில் அடக்கி ஒடுக்குகின்ற தமிழ் விரோத மசோதாக்களும் யாப்பு விதிமுறைகளும் 1972 இற்கு பின்னர் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1980இல் சட்டமாக்கப்பட்ட 6 ஆவது யாப்புத் திருத்த மசோதா பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்ட மசோதா என்பன குறிப்பாக தமிழ் இனத்தவர்களுக்கு பாதிப்புகளை தாக்கங்களை ஏற்படுத்துகின்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிமுறைகள் போன்றவை அத்தகைய அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளுள் சிலவாகும். இந்தச் சட்ட மூலங்கள் வாயிலாக தமிழர்களின் அரசியல் அபிலாøஷகள் அதாவது, சுயதீர்மானம் எடுக்கும் உரிமை குற்றமான செயலாகும் என்ற வரையறைக்குள் தள்ளிவிட முடிந்தது என்று கூறுவதானது நியாயமானதாகும். இதுவரையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களுள் 95% பேர் தமிழ் இனத்தவர்களே ஆவர்.
ஜுரிகளின் சர்வதேச ஆணையத் (ICJ)தின் அங்கத்தவர் போல் சக்கார்ட் (Paul Sieghard) கருத்தின்படி இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது மிகவும் வி?வானதாகும்.
அதிலிருக்கும் அதிகாரத் தத்துவங்கள் சொற்ப அளவிலாவது சுதந்திரமான ஜனநாயக நாடுகளில் காண?டியாது. இந்தச் சட்டங்கள் எந்தவொரு நாகரிகமான நாட்டிலும் யாப்புகளில் கரும்புள்ளியாகவே திகழும். ஐக்கிய நாடுகளின் மனித உ?மைகள் கவுன்சில் மேற்சொன்ன மசோதாவின் சட்ட ஒழுங்கு விதிமுறைகள் மனித உரிமைகளோடு பொருத்தப்பாடுடையதாக இல்லை என்பதை அடையாளம் கண்டுள்ளபோதிலும் அந்தச் சட்டங்கள் இன சம்ஹாரத்துக்கோ சுத்தமாக அழிப்பதற்கோ ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் முறைபற்றி இதுவரை அன்பான மௌனப்போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளது.
இன சம்ஹாரம் (Genocide) என்ற சொல்லை அறிமுகப்படுத்திய ரபாயல் லெங்கின் அதன் மூலம் உடனடியாகவே ஓரினம் அழிக்கப்படுவதில்லை என்றே சொல்லியுள்ளார். பல்வேறு வகையான செயல்பாடுகளை இணைத்து தொடர்புபடுத்திய திட்டமிடப்பட்ட செயல்கள் ஊடாக உயிர்களை கொன்றொழிப்பதன் மூலம் இன சம்ஹாரம் இடம்பெறும் என்கிறார்.
அவ்வாறான செயல்திட்டத்தின் நோக்கமாக இருப்பது ஏதேனுமொரு கலாசாரம் ,மொழி, இனரீதியான கருத்து சமய, இனக் குழுக்களின் பொருளாதார நடப்புக்கு ஏற்புடையதான செல்வாக்கு செலுத்துவதானது அவர்களது அரசியல் சமூக நிறுவனங்களை நாசமாக்கி தனிநபர் சுதந்திரம், சரீர சௌக்கியம், சுயகௌரவம் போன்றவற்றை இல்லாது செய்வதேயாகும்.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் இப்போது மேற்சொல்லப்பட்ட பிரிவுக்குள் அடங்கவில்லையா என்பது எனது கேள்வியாகும்.
மைக்கல் மாண் என்பவரின் கோட்பாட்டின்படி, செய்யப்பட்டு வருகின்ற திட்டமிடப்பட்ட அரசியல் சம்ஹாரம் இன சுத்திகரிப்புக்கான அபாயம் மிக்கதாக இக்காலகட்டம் தென்படுகின்றது. மூர்க்கத்தனமும் வஞ்சனையும் கொண்ட புத்திசாலிகள் கூட்டமொன்று இதனை மூடி மறைக்க முயற்சிக்கின்றது.
பேராசிரியர் ஜயந்த செனவிரட்ன
நன்றி : ராவய
தமிழாக்கம்:
சின்னையா கனகமூர்த்தி






0 விமர்சனங்கள்:
Post a Comment