கனடாவிலிருந்து 200 அகதிகள் நாடு கடத்தப்படும் நிலை
கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.
இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபை தீர்மானித்திருந்தது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே சுவிட்ஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment